மறுசீரமைப்பு பணி: புறநகர் ரெயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன…?

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரெயில்கள், இன்று (20-ந்தேதி) நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படவுள்ளன.

சென்னை கடற்கரை-தாம்பரம்/செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம்: இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை, அனைத்து மின்சார (EMU) ரெயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையில் (விரைவுப் பாதை) இயக்கப்படும்.

அரக்கோணம்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/தாம்பரம்-சென்னை கடற்கரை: மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரெயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையில் (விரைவுப் பாதை) இயக்கப்படும்.

ரெயில் எண்கள் & நேர மாற்றம்: இந்தக் காலகட்டத்தில் (இன்று முதல் ஏப்ரல் 5 வரை), சென்னை கடற்கரை தாம்பரம் / செங்கல்பட்டு/ காஞ்சிபுரம் / அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு ஏ-வில் (Annexure-A) கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link