தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணைமின் நிலையங்களில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கழுகுமலை துணைமின் நிலையம்: கழுகுமலை, வேலாயுதபுரம், கரடிகுளம், குமராபுரம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம்.
கோவில்பட்டி துணைமின் நிலையம்: கோவில்பட்டி நகரம், புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் பகுதி.
சிட்கோ துணைமின் நிலையம்: முத்துநகர், சிட்கோ, கணேஷ்நகர், தங்கப்பன்நகர், புது ரோடு, ஜோதிநகர், கடலையூர் ரோடு, எட்டையபுரம் ரோடு, முகமதுசாலியாபுரம், வேலாயுதபுரம், மார்க்கெட் பகுதிகள், மெயின்ரோடு, பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள், பார்க் ரோடு, கதிரேசன் கோயில் ரோடு, ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி.
எப்போதும்வென்றான் துணைமின் நிலையம்: எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி.
விஜயாபுரி துணைமின் நிலையம்: திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, குருமலை, வண்டானம், வேப்பன்குளம், மும்மலைப்பட்டி.
செட்டிகுறிச்சி துணைமின் நிலையம்: செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்திஸ்வரபுரம்.
சன்னதுபுதுக்குடி துணைமின் நிலையம்: கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு மற்றும் வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா (ஒரு பகுதி), பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பணாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர் 1, 2 ஆகிய பகுதிகள்.
மின்தடை இல்லாத பகுதிகள்:
நாலாட்டின்புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட நாலாட்டின்புதூர், கே.ஆர்.நகர், கே.ஆர். கல்லூரிகள், ரயில்வே காலனி, முடுக்குமீட்டான்பட்டி, வானரமுட்டி, காளாம்பட்டி, காலாங்கரைபட்டி, இடைசெவல் மற்றும் வில்லிசேரி ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் நாளை மின்தடை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
