மாநிலங்களவை தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை,

மாநிலங்களவை தேர்தலுக்கான தி.மு.க. வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தி.மு.க.விற்கான 4 இடங்களில் 2 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்ற 2 இடங்களில் தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இது தொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக

1. திருச்சி சிவா, எம்.ஏ., பி.எல்.,

2. ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எல்., பி.எச்டி.,

ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link