மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் போட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பி.க்களையும் நிறுத்த முடியும். இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன்  ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடமும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி கிறிஸ்டோபர் திலக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

Source link