மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம்

சென்னை,

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் சர்வதேச கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். இவர் அடுத்த மாதம் இத்தாலியில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவிலில் நடிகர் அஜித்குமார் நேற்று சாமி தரிசனம் செய்தார். அஜித்குமார் கோவிலுக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் கோவிலில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Source link