பெங்களூரு,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதியை கர்நாடக அமைச்சரவை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பையை வென்றதையடுத்து ஏற்பட்ட ரசிகர் நெரிசல் மற்றும் சில உயிரிழப்புகள் காரணமாக மைதானம் மூடப்பட்டன.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்த வேண்டும் என அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரை மட்டுமே மைதானத்தில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஆர்.சி.பி வீரர்களின் ஆட்டத்தை மீண்டும் சின்னசாமி மைதானத்தில் காணும் வாய்ப்பு கிடைப்பதால் பெங்களூரு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
