சென்னை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.இதனால் சென்னை அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
வரும் 11ம் டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி வீரர் ஷிவம் துபே கூறியதாவது,
`ஆமா.. நாங்கள் 3 போட்டிகளில் தோல்வியடைந்துவிட்டோம் தான். ஆனா இதுக்கு முன்னாடி வரிசையா 3 போட்டிகளுக்கு மேல ஜெயிச்சிருக்கோம். மறந்துடாதீங்க. துரதிருஷ்டவசமா இப்ப தோல்வியடைந்துவிட்டோ. நாங்கள் மீண்டு வருவோம். அப்படியொரு அணியைநீங்க விரைவில் எல்லாரும் பார்ப்பீங்க. என தெரிவித்துள்ளார்.
