தவெக ஆட்சியில், மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகையாக மீன்பிடி தடைகால நிவாரண நிதி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மீனவர்களுக்கு விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உங்கள் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் பேசியதாவது;
* லஞ்சம் இன்றி, ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும், அதற்கென அட்டை வழங்கப்படும். இனி லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை, வீட்டு வாசலில் அரசாங்க திட்டங்கள் வரும். இது ஸ்டாலின் சார் விடும் கதை இல்லை, அறிவியல்பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் சொல்கிறேன்.

* தவெக ஆட்சி அமைந்தால், தமிழ்நாடு சேவை உரிமை சட்டம், வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஒதுக்கப்படும் நிதி எல்லாம் சிதம்பர ரகசியம்போல இருக்கிறது, அதை நாம் மாற்றுவோம். மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள்.
* மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை மக்கள் கூறும் வகையில், இணையதளம் உருவாக்கப்படும். மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் மனுக்களை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கும் திட்டம் இது. 10,000 பேர் கையொப்பம் இட்ட மனுமீது அரசு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கும், அதேபோல 5 லட்சம் பேர் கையொப்பம் இட்ட மனுமீது சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.

* செயற்கை நுண்ணறிவு தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும். பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் Al பல்கலைக்கழகம் உருவாக்கப்படும், செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்
மீனவர்களுக்கான பாதுகாப்பு உரிமைத்தொகைஇதனை தொடர்ந்து மற்றொரு இடத்தில் வாக்கு சேகரித்த விஜய் மீனவர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது;

* மீனவர்களுக்காக மூன்று அறிவிப்புகளை வெளியிடுகிறேன். உங்களின் மீனவன் நண்பன், நான் வாசிக்கிறேன்.
* மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகைமீன்பிடி தடை காலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8,000 என்பதில் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.

* படகு பாதுகாப்பு நிதிபடகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரையில், வங்கி கடன்களை திருப்பி செலுத்தவும், மீனவர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கவும், படகு உரிமையாளர்களுக்கு ரூ.5,00,000 உடனடி இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.

* கடல் தாய் வீட்டு வசதி திட்டம்கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும், சிதிலமடைந்த குடியிருப்புகளையும் அகற்றி, புயல்களை தாங்கக்கூடிய காலநிலை மாற்றத்தை வீடுகளை தாங்கும் வகையில் தனி வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும்.* இயந்திர படகுகளுக்கான மானிய டீசல் ஒதுக்கீடு மாதந்தோறும் 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு ரூ.15 எனும் நிலையான மானியம், படகு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.இவ்வாறு தவெக தலைவர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
