முகத்தில் வீசப்பட்ட செல்போன்.. கண்கலங்கி நின்ற அண்ணாமலை.. பிரச்சாரத்தில் பரபரப்பு..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களை உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பூக்களையும் தூவினர். பிரச்சார வாகனத்தில் நின்ற அண்ணாமலை வேட்பாளர் திருமாறனுக்கு மாலை ஒன்றை அணிவித்தார். அப்போது திடீரென பூக்களுடன் செல்போன் ஒன்று பறந்தது வந்து அண்ணாமலை முகத்தில் பட்டு கீழே விழுந்தது.

யார் செல்போன எறிந்தது என வேட்பாளர் திருமாறம் கோபம் அடையவே, முதுகில் தட்டிக் கொடுத்த அண்ணாமலை, செல்போனை தூக்கி எறிந்த நபரிடம் சிரித்த முகத்துடன் தம்ஸ் அப் காட்டினார். அதன் பின் செல்போனை உரிய நபரிடமே கொடுத்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை மீது பூக்களை வீசிய போது கையில் இருந்த செல்போன் தவறுதலாகப் பறந்து விழுந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு செல்போனை அண்ணாமலை மீது எறிந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Subscribe to my YouTube Channel

Source link