முதல்வருடன் இணைந்து பிரச்சாரம் செய்வாரா ராகுல் காந்தி.. செல்வப்பெருந்தகை கொடுத்த புதிய தகவல் – cm mk stalin and rahul gandhi are going to campaign with together said selvaperunthagai

சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகத்துக்கு பரப்புரை மேற்கொள்ள வருகை தருவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு தொடர்ச்சியாக தேசிய தலைவர்கள் வருகை தந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தமிழகத்துக்கு வருகை தராமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செல்வப்பெருந்தகை விளக்கம்
சட்டப்பேரவை தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பரப்புரை செய்தால், அது தொண்டர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதனிடையில் தேர்தலுக்கு இன்னமும் 9 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ராகுல் காந்தி தமிழகம் வருகை தருவது பல்வேறு விதமான சந்தேகங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுக்குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

தீவிர ஏற்பாடு
அதாவது ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சேர்ந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார். மேலும், அதற்காக தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த நிகழ்வு எங்க நடக்க போகிறது என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை. இதனால் தேர்தலுக்கு முன்பாக பரப்புரை மேற்கொள்ள ராகுல் காந்தி தமிழகம் வருவார் என்பது உறுதியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அலை
மேலும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்திக்கு ஆதவரான அலை தமிழ்நாட்டில் வீசி வருவதாகவும் தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை. இதன் மூலமாக 210 தொகுதிகளில் நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக, காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்ததுடன், ஆட்சியில் பங்கு என்பதையும் வலியுறுத்தி வந்தனர். அதோடு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்காக காங்கிரஸை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததும் பரப்பினை கிளப்பியுள்ளது. இதனையடுத்து திமுக, காங்கிரஸ் கூட்டணியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

புதுசேரியில் ராகுல் காந்தி பரப்புரை
அதோடு தவெகவுடன் காங்கிரஸ் சென்று விடுவோம் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முயற்சியின் காரணமாக திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தமானது. இதனையடுத்தும் தொடர்ந்து கூட்டணியில் சலசலப்புகள் நீடித்தது. சமீபத்தில் புதுச்சேரிக்கு எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ள வருகை தந்தார்.

தனித்தனியாக பிரச்சாரம்
அதே நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் புதுச்சேரி சென்ற நிலையில், இருவரும் தனித்தனியாக பரப்புரை மேற்கொண்டனர். இது அரசியல் களத்தில் பரப்பாக பேசப்பட்டது. இதனால் திமுக மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வர வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது சில நாட்களில் ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பரப்புரை மேற்கொள்வார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link