இவருடைய முடிவு கட்சிக்குள் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தொண்டர்கள் பலரும் அவர் முதலமைச்சர் பதவியை தொடர வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 30 ஆம் தேதி நிதிஷ் குமார் விலகினார். இந்த பரபரப்புக்கு மத்தியில், பீமார் முதல் மந்திரி நிதிஷ் குமார், இன்று மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு, நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பீகார் முதலமைச்சராக 10 முறை பதவி வகித்த இவர், தனது முதலமைச்சர் பதவியை துறந்து மாநிலங்களவை எம்.பி. ஆக பதவி ஏற்றிருப்பது, இந்திய அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. சுகாதார அமைச்சரும், மாநிலங்களவையின் மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.
மேலும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் பல மூத்த தலைவர்கலும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். எம்பியாக சத்தியப்பிரமாணம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து விரைவில் தன்னுடைய முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் ஏற்கனவே பீகார் மாநில சட்டமன்றம், சட்டமேலவை மற்றும் நாடாளுமன்ற மக்களவை ஆகியவற்றில் உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களை உறுப்பினராகவும் அவர் தற்போது பதவியேற்றிருப்பதன் மூலம் 4 அவைகளிலும் உறுப்பினராக இருந்த என்ற பெருமையை பெற்றுள்ளார் நிதிஷ் குமார்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய என்ன காரணம்?
பீகார் சட்டசபை, மேலவை, நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா என நான்கிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று நிதிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே மற்ற 3 அவைகளில் உறுப்பினராக இருந்துவிட்டதால், இப்போது ராஜ்யசபாவுக்கு செல்வதாக அவர் கூறியிருந்தார். இதன் காரணமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறப்படுகிறது.
தவெகவை சுற்றி வரும் வதந்திகள்! சிபிஐ வழக்கு யாருக்கு வைத்த செக்_
பீகாரின் அடுத்த முதல்வர் யார்?
கடந்த 2025 ஆம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 202 தொகுதிகளில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், லோக்ஜன்சக்தி கட்சி 19 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து பீகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதால், பீகாரின் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. அங்கு பாஜகவுக்கு 89 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆகவே, இந்த முறை பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.
