சென்னை
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் (வயது 96). அவர் இன்று சென்னையில் காலமானார். இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்து உள்ளது. அதுபற்றிய செய்தியில், கோபிநாத்துக்கு ஆழ்ந்த அமைதி உண்டாகட்டும்.
இந்திய கிரிக்கெட்டின் உண்மையான முன்னோடியான அவர், இந்தியாவின் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பெற்று வரலாறு படைத்த அணியில் இடம் பெற்று, உயிருடன் இருந்த கடைசி வீரர் ஆவார். கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் உங்களுடைய புகழ் எப்போதும் நிலைத்திருக்கும் என தெரிவித்து உள்ளது.
இவர் இந்தியாவின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் ஆஸ்திரேலியாவின் நீல் ஹார்விக்கு (வயது 97) அடுத்து உலக அளவில் 2-வது பழம்பெரும் வீரர் ஆவார். மொத்தம் 119 இன்னிங்ஸ் விளையாடியுள்ள வலது கை பேட்ஸ்மேனான கோபிநாத், 4,259 ரன்களை சேர்த்துள்ளார். கோபிநாத் 9 சதங்களையும், 23 அரை சதங்களையும் சேர்த்துள்ளார். அதிக அளவாக 234 ரன்களை அடித்துள்ளார்.
கோபிநாத்தின் மரணம் தொடர்ச்சியாக, இந்தியாவில் உயிருடன் வாழும் மிக பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக சந்திரகாந்த் பதங்கர் (வயது 95) உள்ளார்.
