மும்பையில் காற்று மாசு பிரச்சினை: நடிகை தீபிகா படுகோனே கருத்துக்கு மேயர் பதில்

மும்பை,

மும்பையில் கடந்த சில ஆண்டுகளாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது. மும்பையில் காற்றுமாசு தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளை மாநகராட்சிக்கு பிறப்பித்து வருகிறது.

இந்தநிலையில் நடிகை தீபிகா படுகோனே மும்பை காற்று மாசு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டு

கவலை தெரிவித்து இருந்தார். அவர் மும்பையில் கடந்த வியாழக்கிழமை பதிவான காற்று மாசை பதிவிட்டு, மும்பையில் காற்றுமாசு மோசமாக உள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதாக கூறியிருந்தார்.

நடிகை தீபிகா படுகோனேயின் இந்த கருத்து தொடர்பாக மும்பை மேயர் ரிது தாவ்டே பேட்டியின் போது கூறியதாவது:-

“மும்பையில் பல பெரிய திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதன் காரணமாக தூசி மாசு அதிகரித்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மெட்ரோ, ரெயில், பொதுப்பணித்துறை திட்டங்கள் தொடர்பாக நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட ஒப்பந்ததாரர்களுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தீபிகா படுகோனே மட்டுமல்ல, ஒட்டுமொத்த மும்பை மக்களின் குறைகளையும் கேட்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link