மும்பை அணியை பந்தாடியது பெங்களூரு அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை போராடி தோல்விமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியை தழுவியது.

லக்னோவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி குஜராத் அணி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஆடிய லக்னோ அணி, 20 ஓவரில் 164 ரன்களை சேர்த்தது. எய்டன் மார்க்ரம் (AIDEN MARKREM) அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய குஜராத், 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட் எடுத்த குஜராத் வீரர் பிரஷித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்பும் மிட்சல் ஸ்டார்க்?தோள்பட்டையில் காயம் காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் மிட்சல் ஸ்டார்க், விரைவில் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்டார்க், அணிக்கு முக்கிய பங்கேற்றுவார் என டெல்லி அணி நிர்வாகம் நம்பியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.

KKR அணிக்கு திரும்பும் வேகப்பந்து வீச்சாளர் பதிரானாகாயம் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெறாமல் இருந்த இலங்கை வீரர் பதிரானாவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் உடற்தகுதி சோதனை செய்து தடையில்லா சான்று வழங்கியதால், விரைவில் அணிக்கு திரும்ப இருக்கிறார். வரும் 17ஆம் தேதி அணிக்கு திரும்பும் பதிரானா, 19ஆம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் காண்கிறார். நடப்பு தொடரில் ஆடிய 4 போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோல்வியுற்றதால், பதிரானாவின் வருகை அணிக்கு கூடுதல் பலம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் 4,000 ரன்களை தொட்ட சுப்மன் கில்குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஐபிஎல் வரலாற்றில் 4 ஆயிரம் ரன்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார். மிகக் குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் எனும் பெருமைக்கும் கில் சொந்தக்காரரானார். இதற்கு முன்னர் விராட் கோலி 27 வயதில் இந்த சாதனையை செய்திருந்த நிலையில், கில் தனது 26ஆவது வயதில் கோலியின் சாதனையை முறியடித்தார்.

இன்று SRH vs RRஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

             

Source link