மு.க.ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் இல்லை – வேட்பு மனுவில் தகவல்

சென்னை,

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாக தனது வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link