சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குகின்றன. இதேபோல், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் களத்தில், புது வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் மல்லுக்கு நிற்கிறது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை விழுப்புரம் மண்டல “என் வாக் குச் சாவடி! வெற்றி வாக்குச் சாவடி!” மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.
1,50,000-க்கும் மேற்பட்ட பி.எப்.ஏ.-2. வாக்குச்சாவடி நிலைமுகவர்கள், பி.எல். சி.-வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், பி.ஒய்.டி. வாக்குச்சாவடி இளைஞர்அணி அமைப்பாளர்கள், பி.டி.ஏ. – வாக்குச்சாவடி தகவல் தொழில்நுட்ப அணி முகவர்கள் உள்ளிட்ட வாக்குச்சாவடி குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
