சென்னையில், இன்று மெட்ரோ ரயிலில் பயணித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் வருவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் சென்னையின் இன்று ஏப்ரல் 10ஆம் தேதி, மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ ரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICAவின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்.

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் – சிறுசேரிகலங்கரை விளக்கம் – பூந்தமல்லிமாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம் கட்ட திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

விமான நிலையம் – கிளாம்பாக்கம்கோயம்பேடு – பட்டாபிராம்பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம்தாம்பரம் – கிண்டிகலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம்சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்

சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
