“மெண்டல் மனதில்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் கார்த்தி

சென்னை,

செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக்கி உள்ள படம் ‘மெண்டல் மனதில்’. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும். இருப்பினும் செல்வராகவனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் முதல் படமாகும்.

இந்த நிலையில், ‘மெண்டல் மனதில்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘உயிரே உயிரே’ என்ற பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த பாடலை நடிகர் கார்த்தி வெளியிட உள்ளார். இது குறித்த அறிவிப்பை செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source link