மேற்காசிய போரில் முக்கிய திருப்பம்: ஈரானுக்கு உதவும் ரஷியா

மாஸ்கோ,

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் அமெரிக்க ராணுவ தளங்கள்,போர்க்கப்பல்கள், மற்றும் விமானங்களை தாக்க ஈரானுக்கு உளவுத்துறை தகவல்களை ரஷியா வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ சொத்துக்கள் அமைந்துள்ள இடங்கள் குறித்த தகவல்களை ஈரானுடன் ரஷியா பகிர்ந்து கொண்டுள்ளதாக 3 அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷியாவின் ஆதரவின் அளவு முழுமையாக தெளிவாக இல்லை என்றும் ஆனால் அமெரிக்க படைகளை கண்காணிக்கும் ஈரானின் சொந்த திறன் குறைக்கப்பட்டு விட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். இதில் போர் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மறைவுக்கு புதின் இரங்கல் தெரிவித்தார். விரோதங்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார். என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்தது.

மேலும் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளன என்றும் தெரிவித்தது. இந்த உரையாடலில் ரஷியாவின் ஆதரவிற்கு பெஷேஷ்கியன் நன்றி தெரிவித்தார்.

Source link