மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் -பாஜக வாக்குறுதி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வரும் 23 மற்றும் 29 தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமான 23ஆம் தேதியில் 152 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி வருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால், 6 மாதங்களுக்குள் பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உறுதி செய்யப்படும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 45 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பாஜக திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். இவ்வாறு பல முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Source link