மேற்கு வங்காளம் சட்ட சபை தேர்தல்: பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்பு மனு தாக்கல்

கொல்கத்தா,

294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 -ம் தேதி தொடங்கி ஏப். 6 -ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஏப். 2) தொடங்கி ஏப். 9 வரை நடைபெறுகிறது. ஏப். 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.

இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பவானிபூர் தொகுதியில் போட்டியிட சுவேந்து அதிகாரி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய மந்திரி அமித் ஷா முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை வழங்கினார். மமதா ஏப். 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுவேந்து அதிகாரி ஏற்கெனவே நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த முறை பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு நந்திகிராமில் தோல்வியைத் தழுவிய நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link