மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்துக்கு வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் மேற்கு வங்காள காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேற்குவங் காள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், மேற்குவங்காள தேர்தலில் 294 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு எடுக்கப்பட்டதாக குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link