மோசமான சாதனை படைத்த இளம் வீரர்

லாகூர்,

8 அணிகள் இடையிலான 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் முல்தான் சுல்தான்ஸ்- லாகூர் கலாண்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு முகமது நயீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முல்தான் சுல்தான்ஸ் தரப்பில் 20 வயதான அறிமுக வீரர் முகமது இஸ்மாயில் முதல் ஓவரை வீசினார்.

முகமது இஸ்மாயில் தனது முதல் ஓவரிலேயே 26 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையை படைத்தார் . இது பிஎஸ்எல் வரலாற்றிலேயே போட்டியின் முதல் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும்.

இந்த போட்டியில் லாகூர் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source link