யுபிஎஸ்சி: முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற சுப்பிரமணிய பாரதி – மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

“I am a product of நான் முதல்வன்” – சுப்பிரமணிய பாரதி

கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம்.

ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

நான் முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் இளம் நட்சத்திரம் (young sensation) ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி.

இதுதான் நான் காண விரும்பும் தமிழ்நாடு! வளமான இளைய தமிழ்நாடு!

நமது திராவிட மாடல் அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும்! வெற்றிக் கதைகள் மேலும் உயரும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link