ரஜினிக்கு நன்றி தெரிவித்து “துரந்தர் 2” இயக்குநர் வெளியிட்ட பதிவு

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’ . இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

இப்படத்தை தொடர்ந்து, ‘துரந்தர்’ படத்தின் 2-ம் பாகமாக‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று 4 நாட்களிலேயே ரூ.761 கோடி வசூலித்துள்ளது. இப்படத்திற்கு பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் ‘துரந்தர் 2’ படதை பாராட்டி பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், “‘துரந்தர் 2’ என்னவொரு படம்! சல்யூட் ஆதித்யா தர். பாக்ஸ் ஆபிஸுன் உச்சம். ரன்வீர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்” எனக் கூறியிருந்தார்.

இதனைக் கண்ட ஆதித்யா தர், “சார், நாங்கள் அனைவரும் பொழுபோக்குக்கான அளவுகோளை உங்களிடமிருந்துதான் அறிந்து வளர்ந்தோம். நாங்கள் விசிலடிக்கவும், சிரிக்கவும், அழுகவும் என உங்களின் ஸ்டைலும் வசீகரமும் இன்று வரை பல தசாப்தங்களாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது மேஜிக்தான். ‘துரந்தர் 2’ திரைப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றீர்கள். இதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தருணம். பெரிய கனவுகளைக் காண வேண்டுமென கற்றுக்கொடுத்தவரின் ஆசிர்வாதம் போல உணர்கிறேன். ஜெய்ஹிந்த்” எனப் பதிலளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே நன்றாக இருக்கும் திரைப்படங்களைப் பாராட்டி தன் வாழ்த்துகளைப் பகிர்ந்து வந்தாலும் ‘துரந்தர் 2’ படத்தை வாழ்த்தியது இந்தியளவில் வைரலாகியுள்ளது.

Source link