ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? – வெளியான அறிவிப்பு

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read
ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2′ படத்தின் டீசர் வெளியானது
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? - வெளியான அறிவிப்பு

47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தின் புரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
‘மை டியர் டாலி’ – சினிமா விமர்சனம்
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? - வெளியான அறிவிப்பு

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் நெல்சல் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். இதனை போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Source link