ரஞ்சி கோப்பை: ஜம்மு- காஷ்மீர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

புதுடெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால்- ஜம்மு- காஷ்மீர் அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் கல்யாணியில் நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த பெங்கால் 328 ரன்கள் எடுத்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய காஷ்மீர் அணி 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 26 ரன் முன்னிலையுடன் 2-வது தொடங்கிய பெங்கால் அணி 25.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. அகிப் நபி, சுனில் குமார் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட் டது. இதை நோக்கி ஆடும் காஷ்மீர் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். அந்த அணியில் நிலைத்து விளையாடி வான்ஷாஜ் ஷர்மா 43 ரன்களும் , அப்துல் சமத் 30 ரன்களும் எடுத்தனர்.

இதனால் ஜம்மு காஷ்மீர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஜம்மு காஷ்மீர் அணி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Source link