ரயிலின் நிறம் பார்த்தே அதன்வேகம், வசதி அனைத்தும் தெரிந்துக் கொள்ள முடியும்..– பலருக்கும் தெரியாத ஆச்சரியத் தகவல்! – india, one can determine a train’s speed based on its color

ஒரு ரயிலின் நிறத்தைப் பார்த்தே அதன் வேகத்தை அறிந்துகொள்ள முடியும் என்றால் உங்களால நம்ப முடிகிறதா? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்து சேவையில் முன்னனியில் உள்ளது ரயில் சேவை. இதன்மூலம் லட்சகணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.நாம் சிறு வயதில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருக்கும்போது,நம்மை கடந்து ரயில்கள் செல்லும்.ஆனால், இந்திய ரயில்வே ரயில்கள் ஏன் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? இது வெறும் பொழுதுபோக்கிற்காகச் செய்யப்படும் செயல் மட்டுமல்ல; இதன் பின்னால், இதுவரை நீங்கள் அறியாத பொறியியல், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வேகம் தொடர்பான மறைக்கப்பட்ட இரகசியங்கள் உள்ளன. இது குறித்து இந் த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரயில் பயணம்

ரயில் பயணம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை அதன் நிறமே சொல்லிவிடும் என்றால் கூறினால் நம்பமுடிகிறதா? இந்தியாவில் உள்ள இரயில்கள் வெற்று நிறங்களில் இருக்கும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு. இரயிலின் நிறங்களை நீங்கள் புரிந்துகொண்டால், பயணச்சீட்டைப் பார்க்காமலேயே உள்ளே இருக்கை எப்படி இருக்கும் என்பதையும், இரயில் எவ்வளவு வேகமாகச் செல்லும் என்பதையும் உங்களால் கூறிவிட முடியும்.

நீல நிற ரயில் சேவை

ஒரு ரயில் நீல நிறத்தில் இருந்தால், அது ‘இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி’ (ஐசிஎஃப்) தயாரித்த பாரம்பரியப் பெட்டிகள் என்று புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பெட்டிகள் இரும்பினால் ஆனவை மற்றும் ‘காற்று பிரேக்’ அமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆகும். இந்த ரயில்களில் பயணிக்கும்போது அதிர்வுகள் சற்று அதிகமாக இருந்தாலும், பல ஆண்டுகளாகவே இந்த ரயில்களே இந்தியாவின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. இதனால், இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

சிவப்பு அல்லது மெரூன் நிற ரயில்

ரயில் நிலையங்களில் சிவப்பு அல்லது மெரூன் நிற ரயில் லைப் பார்த்தாலே, அது ஜெர்மானிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ‘லிங்கே ஹாஃப்மேன் புஷ்’ (LHB) பெட்டி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பெட்டிகள் இரும்பிற்குப் பதிலாக துருப்பிடிக்காத எஃகால் செய்யப்படுகின்றன. இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், விபத்தின் போது இந்தப் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறாது, இது பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை மற்றும் வட்டு பிரேக்குகளைக் கொண்டுள்ளன.

வெள்ளை ரயில் சேவை

நவீன இந்தியாவின் புதிய அடையாளம்: வந்தே பாரத் போன்ற வெள்ளை ரயில்கள், இந்திய ரயில்வேயின் நவீன ரயில்களாக பார்க்கப்படுகிறது.இவை மற்ற ரயில்களை காட்டிலும் அதிக வேகமாக இயங்கும்’ அதாவது இவற்றுக்குத் தனி இன்ஜின் தேவையில்லை. முழு ரயிலும் ஒரு இன்ஜின் போலவே செயல்படுகிறது. தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் மற்றும் சுழலும் இருக்கைகள் போன்ற அதன் உயர்தர அம்சங்களை வெள்ளை நிறம் குறிக்கிறது.இனிமேல் நீங்கள் ரயில் நிலையத்திற்குச் செல்லும்போதெல்லாம், ரயில் எண்ணை மட்டும் பார்க்காமல் அதன் நிறத்தையும் பாருங்கள்; அது உங்கள் பயணத்தைப் பற்றிப் பல விஷயங்களை அறிந் துக்கொள்ள முடியும். )இந் த தகவல் சமுகவலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டவை)