ரஷியாவில் 'வாட்ஸ்-அப்' செயலிக்கு தடை; 10 கோடி பயனாளர்கள் பாதிப்பு

மாஸ்கோ,

2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பி லும் பல்லாயிரக்கணக்கானவர்க ரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போரின்போது நாட்டு மக்களின் நடவடிக்கையை உளவு பார்க்கும் பொருட்டு அந்த நாட்டின் அரசாங்கம் சார்பில் மேக்ஸ் என்ற சமூக வலைத்தள செயலியை உருவாக்கியது.

வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை பொதுமக்கள் அனைவரும் நிறுவ கட்டாயப்படுத்தப்பட்டது. முன்னதாக குறிப்பிட்ட பயனாளர்களின் தொலைதொடர்பு தகவல்களை ரஷிய அரசாங்கத்திற்கு வாட்ஸ் அப் கொடுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட வெளிநாட்டு சமூக வலைத்தள செயலிகளுக்கு ரஷியா அரசாங்கம் தடைவிதித்ததுள்ளது. இதனால் ரஷியாவில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வரும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு வாட்ஸ்-அப் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Source link