கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் எல்.பாலாஜி அளித்த ஒரு பேட்டி யில்,
‘கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே எப்போதும் தொடக்க வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் 3-வது வரிசைக்கு கீழ் பேட்டிங் செய்யக்கூடாது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3-வது வரி சையில் அபாரமாக ஆடி நிறைய ரன்கள் எடுத்துள்ளார். அவர் 3-வது வரிசையில் பேட் செய்வது அவருக்கும், கொல்கத்தா அணிக்கும் நல்லதா கும். கேமரூன் கிரீன் 4-வது இடத்தில் பேட் செய்ய வரலாம். அது அவர் தன்னை நிலைநிறுத்தி பிறகு பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் தொடுக்க நேரம் கொடுக்கும். பின் ஆலன், டிம் செய்பெர்ட், ரஹானே, கேமரூன் கிரீன் ஆகியோரை டாப்-4 வரிசையில் ஆட வைப்பது சரியான தேர்வாக இருக்கும். கொல்கத்தா அணியின் தொடக்க வரிசை சிறப்பாக செயல்பட வேண்டும். தொடக்க வரிசை சிறப்பாக செயல்பட் டால் அந்த அணி நல்ல உத்வேகம் பெறும்’ என்று தெரிவித்தார்.
