ராகுல் காந்தியும், காங்கிரசும் பா.ஜ.க.வின் 'பி டீம்': பினராயி விஜயன் பேச்சு

எர்ணாகுளம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆளும் அரசின் பதவிக்காலம் மே 23-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், எர்ணாகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், ராகுல் காந்தி ஒரு தேசிய தலைவர். ஆனால், கேரளாவிலுள்ள காங்கிரசின் கடைநிலை தொண்டரின் அடிப்படை விழிப்புணர்வு கூட அவருக்கு இல்லை. அனுபவங்களில் இருந்தோ அல்லது தவறுகளில் இருந்தோ, அவர் பாடம் கற்று கொள்ள மறுக்கிறார்.

Also Read
ஈரான் கடற்படை தளபதி தாக்குதலில் பலி; இஸ்ரேல் அறிவிப்பு

ராகுல் காந்தியும், காங்கிரசும் பா.ஜ.க.வின் 'பி டீம்':  பினராயி விஜயன் பேச்சு

அவருக்கு இப்படி ஒரு சரிவு எப்படி ஏற்பட்டது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டில், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க.வின் ‘பி டீம்’ ஆகும். அதன் நிலைப்பாட்டையே நாடு முழுவதும் இவர்கள் செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்றார்.

அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றபோது, அதில் பங்கேற்காமல் கேரளாவில் எனக்கு வேலைகள் உள்ளன என கூறி ராகுல் காந்தி சென்றார். அவர் நேற்று பேசும்போது, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மக்களை பிளவுப்படுத்தி கொண்டிருக்கிறது என குற்றச்சாட்டு கூறியதுடன், இடது ஜனநாயக முன்னணியும், பா.ஜ.க.வும் கூட்டுறவில் உள்ளது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் பினராயி விஜயன் பதிலுக்கு, ராகுல் காந்தியும், காங்கிரசும் பா.ஜ.க.வின் ‘பி டீம்’ என்று கூறியுள்ளார்.

Source link