புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சிம்லா சென்றுள்ளார். தனிப்பட்ட பயணமாக சிம்லா சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிம்லாவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள சரப்ராவில் இருக்கும் தனது சகோதரி பிரியங்கா காந்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அவர் அங்கு தங்குவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராகுல் காந்தியின் வருகையை தொடர்ந்து அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
