புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுபதிவிற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து பாஜக, காங்கிரஸ் தேசிய கட்சி தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் புதுச்சேரி வர உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் களை கட்டியுள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் நான் உழலை ஒழிப்பேன் மற்றும் அதை சகித்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி வருகிறார்.இந்த நாட்டில் உள்ள சொத்துக்களை எல்லாம் அது விமான நிலையம், துறைமுகம் அல்லது பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி அனைத்தையும் மோடி அதானிக்கு தாரை வார்த்து கொடுக்கிறார்.
இந்த புதுச்சேரி மாநிலத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் என்.அர்.பாஜக அரசு பொது சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள். கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிக்கினறனர். அது மட்டுமல்லாமல் இந்த ஆட்சியில் எல்லா துறைகளிலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. நமது மாநிலத்தின் கலசாரத்தை குட்டி சுவராக உருவாக்கி கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு எந்த ஒப்பந்தம் போட்டாலும் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை. மேலும் ஊழல் மலிந்து இருக்கிறது. இதனையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர். நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. டெல்லியில் இருந்து வந்திருக்கிறேன் இந்த அரசு கடந்த 5 ஆண்டுகளில் 400க்கு மேற்ப்பட்ட ரீசோ பார்களை திறந்துள்ளது.புதுச்சேரியில் மக்கள் கேட்பது குடிநீரை, பாஜக தருவது மதுவை.
புதுச்சேரியில் மதுபான ஆலைகளை மட்டுமே பாஜக கூட்டணி அரசு தொடங்கி உள்ளது.
இந்த ஆட்சியிலே 6 மதுப்பான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொழிற்சாலைகள் தொடங்குவார்கள் ஆனால் இங்கே அரசு மதுபான தொழிற்சாலைகளையை தொடங்கி வருகிறது.
இங்கே குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது. மேலும் மக்கள் குடிநீர் தட்டுபாடுகளால் அவதிப்படுகின்றனர்,ஆனால் இந்த அரசு சுத்தமான நீரை 24 நான்கு மணி நேரமும் தடையில்லாமல் ஆலைகளுக்கு மதுப்பானம் தயாரிப்பதற்கு வழங்கி வருகிறது. புதுச்சேரியில் மதுபான ஆலைகளை மட்டுமே பாஜக கூட்டணி அரசு தொடங்கி உள்ளது.
ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரப்படுமென 2019, 2024 தேர்தலில் வாக்குறுதியாக அளித்துள்ளோம். 2029-ல் ராகுல் காந்தி இந்நாட்டின் பிரதமராக வரும்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
