புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, அணியின் உரிமையாளர் விற்கப்போவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க தொழில் அதிபரான கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளனர். 1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பண மதிப்பில் சுமார் 15,281.22 கோடி) அணியை வாங்கியுள்ளனர்.
அந்த கூட்டமைப்பில் வால்மார்ட்டின் ராப் வால்டன், போர்டு நிறுவனத்தின் ஹாம்ப் குடும்பத்தினர் இணைந்துள்ளனர்.2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், உரிமையாளர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.
