ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ஸ்பை திரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இந்த ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
