ரீ-ரிலிஸாகும் விஜய்யின் “தெறி” பட “கலரு கண்ணாடி” பாடல் அப்டேட்

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன், சுனைனா உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்திருந்தார். இத்திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

‘தெறி’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. ‘திரௌபதி 2’ படத்தின் ரிலீஸ்காக ஜனவரி 15ம் தேதி வெளியாக இருந்த ‘தெறி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான “கலரு.. கண்ணாடி” பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 4:40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

Source link