ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

புதுடெல்லி,

வளைகுடா பிராந்திய போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அதிகரித்து இருக்கிறது. போர் தொடங்கியது முதல் இதுவரை 4 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து உள்நாட்டு வினியோக சந்தையில், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் நிகர இந்திய ரூபாய் இருப்பு ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் 100 மில்லியன் டாலர்களுக்குள் இருப்பதை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் இந்த உத்தரவுக்கு விரைவில், அதேநேரம் ஏப்ரல் 10-க்குள் இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ச்சியான வெளியேற்றம் மற்றும் வலுப்பெற்று வரும் டாலர் ஆகியவற்றின் மத்தியில், இந்திய ரூபாய்க்கு எதிரான பெரிய பந்தயங்களைக் குறைப்பதையும், கடுமையான ஏற்ற இறக்கங் களைத் தடுப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்று சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

Source link