தமிழ்நாடு தேர்தல் வேட்புமனுத்தாக்கல்
இன்று நடந்த வேட்புமனு பரீசிலனையில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆதவ் அர்ஜுனா மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்ததாக கூறி சுயேட்சை வேட்பாளர் முரளி வினோத் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் HDFC மற்றும் AXIS வங்கிகளில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான டெபாசிட் வைத்திருந்தும், அதனால் கிடைக்கும் வருமான விவரங்களை ஆதவ் அர்ஜுனா வெளியிடவில்லை.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
மேலும், ரூ.1,69,90,582 அளவுக்கு பணம் கையிருப்பில் வாக்களர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் ஆதவ் வேட்புமனு ஏற்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 234 தொகுதியில் தவெக வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் இருந்து போராடி வருகிறேன். அந்த வகையில், இன்றும் அரசியலில் போராடி வருகின்றேன். என் மீது உள்ள சொத்துகளை தான் கணக்கு காண்பிக்க வேண்டும் அதன்படி, மார்ச் 25 ஆம் தேதி வரைக்கும் உள்ள கணக்குகள் அனைத்து தகவல்களியும் பதிவு செய்து உள்ளேன்.
ஆதவ் அர்ஜுனா வேட்புமனு சர்ச்சை
என் மனைவி மீது உள்ள கணக்குகளையும் காண்பித்து இருக்கிறேன். ஷேர் ஹோல்ராக இருக்க கூடிய நிறுவனங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டுமே தவிர, டெரக்டராக இருக்க கூடிய நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த அடிப்படை அறிவுகூட திமுக வழக்கறிஞர்கள் இல்லை. வேட்புமனுத்தாக்கல், தகவல் மற்றும் கையெழுத்து மாறியிருந்தால் தான் மனு நிராகரிக்கப்படும். ஆனால், அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர்கள் கத்திக்கொண்டு இருந்தார்கள். தேர்தல் ஆணையர் சத்தியன்படி என்னுடைய மனுவை ஏற்க்கொண்டு உள்ளார். இவ்வாறு கூறினார்.
வேட்புமனுவில் ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த விவரம்
முன்னதாக வில்லிவாக்கல் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜூனா போட்டியிட உள்ளார். அதற்கான வேட்புமனுத்தாக்கலையும் செய்து இருந்தார்.பிரமாணப்பத்திரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில், அவர் மொத்தம் ₹11.10 கோடி வருமானம் ஈட்டியுள்ளார், அதே நேரத்தில் அவரது மனைவி ₹6.85 கோடி வருமானம் ஈட்டியதாக அறிவித்துள்ளார். அர்ஜுனா தனது பிரமாணப் பத்திரத்தில், தான் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ₹ 2.29 கோடி மதிப்புள்ள 1,691 கிராம் தங்கம் வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் அவரது மனைவி ₹ 3.01 கோடி மதிப்புள்ள 2,225.62 கிராம் தங்கம் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவர் ₹ 60.27 லட்சம் மதிப்புள்ள 24,109.34 கிராம் வெள்ளி மற்றும் ₹ 6.16 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் வைத்திருப்பதாக அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனா , அரைஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட், அத்லெடிக் கேம் ஸ்ட்ராடஜி அண்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ₹ 2.23 கோடி முதலீடு செய்துள்ளார் .
்₹ 63,332 மதிப்புள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் உட்பட நான்கு வாகனங்களையும் சொந்தமாக வைத்துள்ளார் . அசையா சொத்துக்களின் விவரங்களைப் பொறுத்தவரை, அர்ஜுனாவுக்குச் சொந்தமாக எந்த விவசாய நிலமும் இல்லை, ஆனால் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 17.49 கோடி கொண்ட குடியிருப்புச் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
