‘ரெயில் ஒன்’ செயலியை 2.57 கோடி பயணிகள் பதிவிறக்கம்

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே பயணிகளுக்கு எளிதான மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் வகையில் ‘ரெயில் ஒன்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி, முன்பு தனித்தனியாக இருந்த பல செயலி களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே தொடர் பான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் யூ.டி.எஸ். கணக்குகளை பயன்படுத்தி ஒரு முறையில் உள்நுழைந்து அனைத்து சேவைகளையும் பெறலாம்.

இதற்கிடையே, கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் யூ.டி.எஸ். செயலி நிறுத்தப் பட்டு, அதன் சேவைகள் முழுமையாக ரெயில் ஒன் செயலிக்குள் மாற்றப் பட்டுள்ளன. இதற்கு மிக முக்கியமான காரணம், வெவ்வேறு ரெயில் செய லிகளை பயன்படுத்தியவர்களை ஒருங்கிணைந்த ரெயில் ஒன் செயலியை பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதுதான். அதன்படி, தற்போது ரெயில் ஒன் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிகை வேகமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இந்த செயலியை கடந்த பிப்ரவரி மாதம் வரையில் 2 கோடி பயணிகள் பதிவிறக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த மாதத்தில் (மார்ச் 15-ந்தேதி வரை) 57 லட்சம் பயணிகள் பதிவிறக்கம் செய்து மொத்தம் 2.57 கோடி ரெயில் பயணிகள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பயணிகளுக்கு விரைவான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்கும் முக்கிய டிஜிட்டல் மாற்றமாக ‘ரெயில் ஒன்’ செயலி பார்க்கப்படுகிறது.

Source link