‘அனகனகா ஒ அதிதி’, ‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல்நிலையம்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றான ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ இன்றும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2எம் சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் சமீபத்தில் வெளியிட்டார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு, சுப. வீரபாண்டியன் மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் , வெற்றி – அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே-சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
