ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினா் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக லெபனானின் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் போா் விமானங்கள் மூலம் குண்டுவீசியும், தரைப்படை மூலம் பீரங்கி தாக்குதலும் நடத்தி வருகிறது.
வரும் நாட்களில் ஈரான், லெபனானில் புதிய ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். ஈரான், லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் அதிகரிக்க இருப்பதையே அவா் இவ்வாறு தெரிவித்திருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தநிலையில், லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், 2022-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
