“லோகா 2” படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் – கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘லோகா’ படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான ‘கள்ளியங்காடு நீலி’ ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் பேன்டசி-ஆக்சன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிகம் வசூல் செய்த படமாக மாறியது.

இந்த நிலையில், ‘லோகா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கல்யாணி பிரியர்தர்ஷன் லோகா 2 குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், ‘லோகா 2’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்புகிறேன். ‘லோகா 2’ படத்திலும் நான் படத்தில் நடிக்கிறேன்,” என்று தெரிவித்தார்.



Source link