லாகூர்,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக வருகிற 9-ந்தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் ஆட்டங்கள் டாக்காவில் மார்ச்.11, 13 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக் கப்பட்டது. உலகக் கோப்பை தோல்வி எதிரொலியாக அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் னாள் கேப்டன் பாபர் அசாம், பஹர் ஜமான், சைம் அயூப், நசீம் ஷா உள் ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.
பாகிஸ்தான் அணி வருமாறு:-
ஷகீன் ஷா அப்ரிடி (கேப்டன்). அப்துல் சமாத், அப்ரார் அகமது, பகீம் அஷ்ரப், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுப், ஹூசைன் தலாத். மாஸ் சதாகத், முகமது ரிஸ்வான். முகமது வாசிம், காஜி கோரி, சாத் மசூத், சஹிப்சதா பர்ஹான், சல்மான் அலி ஆஹா, ஷமில் ஹூசைன்.
