வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ஏப்.1 முதல் ஏடிஎம் விதிகளில் வரும் முக்கிய மாற்றங்கள்

வரும் ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு முதல் ஏடிஎம் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

* யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் வரும் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஹெச்.டி.எப்.சி வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஏடிஎம் கார்டுகளுக்கு உள்ள அதே விதி இனி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை யுபிஐ கியூஆர் கோடு வழியாக ஏடிஎம்களில் பணம் எடுத்தால் தனியாக கட்டணம் கிடையாது. இனி, 5 முறைக்கு மேல் யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ரூ. 23 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

* பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்புகளை மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, கார்டு வகையைப் பொறுத்து தினமும் ரூ. 50,000 முதல் ரூ. 75,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வரை ரூ. 1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும் என்ற விதி இருந்தது.

* ஜியோ பேமண்ட்ஸ் வங்கியும் கியூஆர் கோடு அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், யுபிஐ கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, நியமிக்கப்பட்ட வங்கி பிரதிநிதிகளிடம் பணத்தை பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

* பந்தன் வங்கி ஏப்ரல் 1, 2026 முதல் டெபிட் கார்டு பயனர்களுக்கான இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, பந்தன் வங்கி ஏடிஎம்-களில் மாதத்திற்கு அதிகபட்சம் 5 இலவச பரிவர்த்தனைகள் மற்றும் வரம்பற்ற நிதியற்ற பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி வழங்கப்படும். ஆனால், பிற வங்கி ஏடிஎம்-களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு, மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 பரிவர்த்தனைகள் மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படும். இந்த வரம்பு நிதி மற்றும் நிதியற்ற பரிவர்த்தனைகள் இரண்டையும் சேர்த்து கணக்கிடப்படும்.

Source link