2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், வேல்முருகனின் அறிவிப்பு ஒன்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி
கடந்த சில வாரங்களாகவே திமுக – தவாக இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன், இந்த முறை தனது கட்சிக்குக் குறைந்தது 2 முதல் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், அவை தவாக-வின் பம்பரம் சின்னத்தில் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தார்.
