"வடம்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் “வடம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Also Read
“மைலாஞ்சி” படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்
"வடம்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில் உருவான, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Also Read
பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி
"வடம்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 16ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link