வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக கேசவ விநாயகம் நியமனம்

சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரஷோபக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திற்கு புதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

”ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு எடுத்து வேலை செய்த கேசவ விநாயகன் இனி தமிழ்நாடு முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.ன் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link