வரலட்சுமியின் ”சரஸ்வதி” – டிரெய்லரை வெளியிட்ட நானி

சென்னை,

நடிகை வரலட்சுமியின் ”சரஸ்வதி” படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி சரத்குமார், இப்போது ஒரு புதிய சவாலை ஏற்றுள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமாக போகிறார்.

தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து, தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு பேனரைத் தொடங்கியுள்ளார். இவர்களது முதல் படத்திற்கு ”சரஸ்வதி” என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலட்சுமி இதை தயாரித்து இயக்குவது மட்டுமில்லாமல் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.

Also Read
முதல் முறையாக பிலிம் பேர் மேடையில்…நடிகை சன்யா மல்ஹோத்ரா உற்சாகம்
வரலட்சுமியின் ”சரஸ்வதி” - டிரெய்லரை வெளியிட்ட நானி

திரில்லர் படமாக உருவாகும் சரஸ்வதியில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Source link