வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதை கண்டித்த தாய்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்த முன்னா சரோஜ் என்பவர், தனது 18 வயது மகள் லட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இதன்படி, லட்சுமிக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையில், லட்சுமி தனது வருங்கால கணவரின் செல்போன் நம்பரை வாங்கி, அவரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே தனது மகள் இவ்வாறு அவரது வருங்கால கணவருடன் அடிக்கடி பேசி வருவது லட்சுமியின் தாய்க்கு பிடிக்கவில்லை. எனவே, லட்சுமியிடம் செல்போனில் பேசுவதை குறைத்துக் கொள்ளுமாறு கூறி அவரது தாய் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், தாய் திட்டியதால் மனமுடைந்த லட்சுமி, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், லட்சுமியின் தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லட்சுமியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link