வர்ணனையாளர் பணியில் இருந்து சிவராமகிருஷ்ணன் ஓய்வு

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த 60 வய தான எல்.சிவராமகிருஷ்ணன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

‘புதிதாக வருபவர்கள் எல்லாம் ‘டாஸ்’ போடும் இடத்திற்கு வந்து பிட்ச் குறித்து பேசுகிறார்கள். ஆனால் 23 ஆண்டுகளாக டாஸ் போடுதல் மற்றும் வீரர்க ளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புக்கு என்னை பயன்படுத்த வில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ என்று தனது எக்ஸ் தளத்தில் அவர் வினவியுள்ளார். நிற பாகுபாடு காட்டப்பட்டதாக அவர் சூசகமாக குற்றம் சாட்டியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி யுள்ளது.

Source link